இலங்கையின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய பல விடயங்களை ஆராய புதுடில்லிக்கு விஜயம் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு எப்போது செல்வாரென்பதனை கூட்டமைப்பின் தகவல்கள் உறுதிப்படுத்தவில்லை.
















