உலகில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்

poor-lifeஉலகில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உலகில் சுமார் 30 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். உலக அடிமை சுட்டெண் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 162 நாடுகளில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 14 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் மருடுவானாவின் மொத்த சனத்தொகையில் நான்கு வீதமானவர்கள் அடிமைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறைமுகமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுக்கு எதிராக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான அடிமைகள் வாழ்ந்து வரவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக அடிமைகள் சுட்டியில் இலங்கை 118ம் இடத்தை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply