சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் இடம் முக்கியமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் – அரியநேத்திரன்

ariyanenthiranதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது கொள்­கையில் இருந்துகொண்­டுதான் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முயலும் என்­பதில் யாருக்கும் எந்தச் சந்­தே­கமும் இருக்­கக்­கூ­டாது. மக்­களின் உணர்­வ­லைகள் தமிழ் தேசி­யத்தின் ஒற்­று­மைக்­கான வெளிப்­பா­டா­கவே இருந்­தது. எனவே, அதை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார்.

கூட்­ட­மைப்பின் சத்­தியப்பிர­மாணம் தொடர்­பாக கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

வட மாகாண சபையில் தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைத்­தி­ருக்­கின்­றது. ஆனால், கூட்­ட­மைப்பின் கொள்­கையில் இருந்து சற்றும் வில­க­வில்லை என்­பதை அனைத்து தமிழ் மக்­களும் புரிந்­து­கொள்ள வேண்டும்.

வட மாகாண சபை தேர்­தலின் சத்­தியப்பிர­மாண நிகழ்­வா­னது மூன்று கட்­டங்­க­ளாக நடை­பெற்­றன. முத­லா­வது நிகழ்வு ஜனா­தி­ப­தியின் முன்­னி­லையில் அலரி மாளி­கை­யிலும் இரண்­டா­வது நிகழ்வு யாழ்ப்­பா­ணத்தில் வீர­சிங்கம் மண்­ட­பத்­திலும் மூன்­றா­வது நிகழ்வு முள்­ளி­வாய்க்­கா­லிலும் இடம் பெற்­றுள்­ளது.

எந்த இடத்தில் சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுக்­கின்றோம் என்­பது முக்­கி­ய­மல்ல, அதில் எழு­தப்­பட்­டி­ருக்கும் வச­னங்கள் அனைத்தும் ஒரே விட­யம்தான் என்­ப­தனை மாத்­திரம் அனை­வரும் புரிந்­து­கொள்ள வேண்டும்.

முள்­ளி­வாய்க்­காலில் தான் இறு­திக்­கட்­டப்போர் இடம் பெற்­றது. இந்த இடத்­திலே எமது மக்­களும் போரா­ளி­களும் தங்­க­ளது உயிர்­களை மாய்த்­தார்கள். எனவே, இப்­பி­ர­தேசம் ஒரு புனி­தப்­பி­ர­தே­ச­மாக பார்க்­கப்­பட வேண்­டிய தொன்­றாகும். எனவே, இங்கு சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுப்­ப­தென்­பது பொருத்­த­மான நட­வ­டிக்­கை­யாகத் தெரி­ய­வில்லை.

இதனை விடுத்து இங்கு சத்­தியப்பிர­மாணம் செய்­வ­தென்­பது முள்­ளி­வாய்க்­காலில் சத்­தியப் பிர­மாணம் எடுப்­ப­வர்கள் துரோ­கி­க­ளா­கவும் அல்­லது ஏனைய இடங்­களில் சத்­தியப்பிர­மாணம் எடுத்­த­வர்கள் முட்­டாள்­க­ளா­கவும் யாரும் கரு­தி­வி­ட­மு­டி­யாது. எமது மாவீ­ரர்கள் எந்த இலட்­சி­யத்­திற்­காக மர­ணித்­தார்­களோ அந்த இலட்­சி­யத்தை கொச்­சைப்­ப­டுத்தும் அள­விற்கு யாரும் செயற்­பட முனை­யக்­கூ­டாது.

வட­மா­காண சபை தேர்தல் பிர­சா­ரங்­களில் அனை­வரும் மாவீ­ரர்­களின் தியா­கங்­களை மேடையில் வலி­யு­றுத்­தித்தான் மக்­க­ளிடம் வாக்குக் கேட்­டார்கள். மக்கள் வாக்­க­ளித்­தது வெறு­மனே வட மாகாண ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு மாத்­தி­ர­மல்ல. மாறாக, வடக்கும் கிழக்கும் இணைந்த மாகா­ணத்­திலே தமி­ழர்கள் சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய அனைத்து உரி­மை­க­ளையும் பெற்று சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்கே ஆகும்.

இறுதிக் கட்டப் போராட்­டத்தில் இலட்­சக்­க­ணக்­கான தமிழ் மக்­களை கொன்றுகுவித்த அர­சாங்­கத்­திற்கு தமக்­குள்ள ஒரே ஆயு­த­மா­க­வுள்ள ஜன­நா­யக ரீதி­யான வாக்­குச்­சீட்டு மூலமே பாரிய பதிலடியைக் கொடுத்­தார்கள். இதனைப் புரி­யாத சிலர் அமைச்சுப் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் கட்சிக்குள்ளே முட்டி மோதிக் கொண்டிருப்பதும் ஊடக மாநாடுகளை வைத்து ஊடகங்களில் ஏட்டிக்கு போட்டியான அறிக்கைகளை விடுவதும் ஒட்டு மொத்த விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதும் மலினப்படுத்துவதுமான செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

Tags: ,

Leave a Reply