15 வயது சிறுமியை கடத்திச்சென்று குடும்பம் நடத்திய இளைஞன் கைது

arrestபதி­னைந்து வய­து­டைய சிறுமி ஒருவரை அவ­ரது பாது­கா­வ­ளர்­க­ளி­ட­மி­ருந்து கடத்திச் சென்று அச்­சி­று­மி­யுடன் குடும்பம் நடத்­திய­ குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தளுவை நின்­தெ­னிய எனும் பிர­சேத்தைச் சேர்ந்த சிறு­மியே இவ்­வாறு கடத்திச் செல்­லப்­பட்டு குடும்ப வாழ்வில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார்.

குறித்த சிறு­மியின் தாய் தனது தாயின் பொறுப்பின் சிறு­மியை ஒப்­ப­டைத்து ­விட்டு வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பெற்றுச் சென்­றுள்ளார். இதன் பின்னர் சிறுமி தனது பாட்­டியின் பொறுப்பில் இருந்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வ­ருடன் இச்­சி­றுமி காதல் தொடர்­பினை ஏற்­ப­ டுத்திக் கொண்­டி­ருந்­துள் ளார்.
இத்­தொ­டர்பின் பல­னாக சில மாதங்­க­ளுக்கு முன்னர் குறித்த சிறு­மியை சந்­தேக நப­ரான இளைஞன் அவ­ளது பாட்­டிக்குத் தெரி­யா மல் கடத்திச் சென்று இரு­வரும் கணவன் மனை­வி­ யாக வாழ்ந்து வந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் வெளி­நாடு சென்­றி­ருந்த சிறு­மி யின் தாய் நாடு திரும்­பிய பின்னர் இச்­சம்­பவம் தொடர்பில் புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய ­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட புத்­தளம் பொலிஸார் சந்­தேக நபரான இளைஞரை நேற்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply