இந்தியாவிலேயே எழுத்தறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரள மாநிலம், குற்றச் செயல்களிலும் முதலிடம் பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய குற்றப் பதிவுத்துறை 2013ஆம் ஆண்டிற்கான குற்றச் செயல்கள் குறித்து வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டப்படி கேரள மாநிலத்தில் இலட்சம் பேருக்கு 456 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று அந்த தகவல் கூறுகிறது.
கேரளாவிற்கு அடுத்தப்படியாக மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது.
குற்றச் செயல்கள் மிக குறைவாக உள்ள மாநிலமாக நாகாலாந்து திகழ்கிறது. அதிக அளவில் குற்ற செயல்கள் நடைபெறும் நகரங்கள் பொறுத்த வரை கேரள மாநிலம் கொச்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அண்மையில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களாக கூறப்பட்ட கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் குற்றச் செயல்களும் அதிகமாக நடப்பதாக வெளியாகியுள்ள புள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















