பாம்பைக் கண்டு உள்ளாடையுடன் பயந்தோடிய நியூஸிலாந்து றக்பி, குத்துச்சண்டை நட்சத்திரம்

sony-bill-williamsநியூ­ஸி­லாந்தின் மிகப் பிர­ப­ல­மான றக்பி வீரரும் குத்­துச்­சண்டை வீர­ரு­மான சொனி பில் வில்­லியம்ஸ், பாம்­பொன்றைக் கண்டு அல­றி­ய­டித்து ஓடிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

28 வய­தான சொனி பில் வில்­லியம், தற்­போது றக்பி லீக் உல­கக்­கிண்ண போட்­டி­க­ளுக்­கான றக்பி குழாமில், நியூ­ஸி­லாந்து அணி­யி­ன­ருடன் அ­வுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில் பயிற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கிறார்.

அண்­மையில் அவர், தனது அணி வீர­ரான பிராங் போல் சகிதம் மருத்­துவ அறை­யொன்றில் மசாஜ் சிகிச்சை பெற்­றுக்­கொண்­டி­ருந்த பாம்­பொன்றைக் கண்டு திகைப்­ப­டைந்தார். சுமார் ஒரு மீற்றர் நீள­மான அப்­பாம்பு தான் இருந்த பக்­க­மாக திரும்­பி­ய­போது பீதி­ய­டைந்த சொனி வில்­லியம்ஸ், மசாஜ் மேசை­யி­லி­ருந்து எழுந்து வெளியே ஓடத் தொடங்­கினார்.

அவ்­வே­ளையில் தான் உள்­ளாடை மாத்­தி­ரமே அணிந்­தி­ருந்­ததைப் பற்றி சொனி வில்­லியம்ஸ் கவ­லை­ய­டை­ய­வில்லை. பாம்­பி­ட­மி­ருந்து தப்­பித்தால் போதும் என எண்­ணியுள்ள அவர் மிக வேக­மாக ஓடிய காட்சி கமெ­ராக்­களில் பதி­வா­கி­யுள்­ளன.

‘சொனி வில்­லியம்ஸ் அப்­போது 90 நிமிட மசாஜ் சிகிச்­சைக்கு மத்­தியில் இருந்தார். ஆனால் பாம்பைக் கண்­ட­வுடன் அவர் பாய்ந்து ஓடத்­தொ­டங்­கினார்’ என நியூ­ஸி­லாந்து றக்பி அணியின் பேச்­சாளர் கலே வில்சன் தெரி­வித்­துள்ளார். றக்பி அரங்கில் ஆக்­ரோ­ஷ­மாக மோதும் வீரர்­களில் ஒரு­வ­ரான சொனி பில் வில்­லி­யம்ஸ் பாம்பைக் கண்டு பயந்­தோ­டி­யதைக் கண்டு அணி வீரர்கள் சிரிக்கத் தொடங்­கினர்.

தனது கட்­டுடல் மூலமும் விளை­யாட்டுத் திற­மைகள் மூலமும் மில்­லியன் ரசி­கர்­களைக் கவர்ந்­தவர் சொனி பில் வில்­லியம்ஸ்.

உலகின் மிகப் பழைய றக்பி சம்­மே­ள­ன­மான றக்பி யூனியன் மற்றும் அதி­லி­ருந்து பிரிந்த றக்பி லீக் ஆகிய இரு அமைப்­பு­க்களின் போட்­டி­க­ளிலும் விளை­­யா­டியவர் இவர். அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி ரூஸ்டர்ஸ் கழ­கத்தின் சார்­பிலும் இவர் விளை­யா­டி­யுள்ளார்.

2004 ஆம் ஆண்டு முதல் தொழிற்சார் றக்பி போட்­டி­களில் விளை­யாடி புகழ் பெற்ற அவர் 2009 ஆம் ஆண்டு தொழிற்சார் குத்­துச்­சண்டைப் போட்­டி­க­ளிலும் கள­மி­றங்­கினார். இது­வரை 6 தடவை அதி­பார தொழிற்சார் குத்­துச்­சண்டை போட்­டி­களில் பங்­கு­பற்றி 6 போட்­டி­க­ளிலும் அவர் வெற்­றி­யீட்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இவற்றில் 3 வெற்­றிகள் நொக் அவுட் முறையில் பெறப்­பட்­ட­வை­யாகும்.

நியூ­ஸி­லாந்து தொழிற்சார் குத்­துச்­சண்டை சங்­கத்தின் அதி­பாரப் பிரிவு நடப்புச் சம்­பி­ய­னாக விளங்கும் அவர்இ கடந்த பெப்­ர­வரி மாதம் தென்­னா­பி­ரிக்க வீரர் பிராங்­சுவா போத்­தாவை தோற்­க­டித்து உலக குத்­துச்­சண்டை சங்­கத்தின் (டபிள்யூ.பி.ஏ.) சர்­வ­தேச அதி­பார சம்­பியன் பட்­டத்தை வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

றக்பி யூனியன் நடத்தும் உல­கக்­கிண்ணப் போட்­டி­களில் 2011 ஆம் ஆண்டு சம்­பி­ய­னா­கிய நியூ­ஸி­லாந்து அணியில் விளை­யா­டி­யவர் சொனி பில் வில்­லியம்ஸ்.

தற்­போது அவர் றக்பி லீக் அமைப்பு நடத்தும் உல­­கக்­கிண்ணப் போட்­டி­க­ளுக்­கான நியூஸிலாந்து அணியில் அவர் பயிற்சி பெற்று வரு­கிறார். இப்­போட்­டிகள் இம்­மாத இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

அதன்பின் 2015 ஆம் ஆண்டு றக்பி யூனியன் அமைப்பு நடத்தும் உலகக் கிண்ண றக்பி போட்டிகளில் நியூஸிலாந்து அணி சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள உதவ விரும்புவதாகவும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் நியூஸிலாந்து சார்பில் விளையாட விரும்புவதாகவும் சொனி பில் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply