இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டினை எமது கட்சி புறக்கணிக்கின்றது. இதற்கு எமது முழுமையான எதிர்ப்பினை நாம் தெரிவிக்கின்றோம் என ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலம் மக்கள் எவ்விதத்திலும் நன்மையடைய மாட்டார்கள் எனவே இதனை எதிர்க்கின்றோம் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















