குஷ்புவிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டுமாம்

kushbuசமீபத்தில் ஒரு பட விழாவில் பேசிய, இயக்குனர் சங்க தலைவர் கேயார், நடிகை குஷ்புவை, வெகுவாக பாராட்டினார்.

“படங்களில் நடித்து முடித்ததும், இனி அதற்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்று, நடிகர் – நடிகைகள் ஓட்டம் பிடிக்கக் கூடாது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும், பங்கேற்க வேண்டும்.

தற்போதைய நடிகைகள், குஷ்புவிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நான் இயக்கிய ஆறு படங்களில், குஷ்பு நடித்துள்ளார். குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வருவார். தான் நடிக்கும் எல்லா படங்களின் நிகழ்ச்சிகளிலும், தவறாமல் கலந்து கொள்வார்.

அதனால், இன்றைய நடிகைகள், குஷ்புவை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்” என்கிறார் கேயார்.

Tags: , , ,

Leave a Reply