பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வளர்களால் விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும்என பிரேரித்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பிர்னர் கைது
வடக்க்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பலத்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளதுடன் தீர்மானத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலையத்துள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இந்த தீர்மானத்தின் எதிரொலியாக கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையும் நேற்று (17.10.13) மற்றயதொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அத்தீர்மானத்தில் வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு ஏதுவாக இன்று அவற்றை சிரமதானம் செய்ய வேண்டும் எனவும் அந்த வகையில் கனகராயன்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பகுதி இன்று சிரமதானம் செய்யப்படும் எனவும் கரச்சிப் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
இந்த வகையில் சாவகச்சேரி பிரதேச சபையில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் கொழும்பில் இருந்து சென்ற விசேட புலனாய்வுப் பிரிவனரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். இதேவேளை குறித்த பிரதேச சபைத் தலைவரையும் பொலிஸ்நிலையத்திற்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் கரச்சிப் பிரதேச சபையின் தீர்மாணத்திற்கு அமைவாக கனகராயன் குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்யப்பட இருந்தது. இதனை அறிந்து கொண்ட பாதுகாப்பு தரப்பு 300க்கு மேற்பட்ட படையினர் மூலம் அப்பிரதேசத்தை சுற்றி வளைத்து எவரும் உட்புக முடியாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இதனால் சிரமதானப்பணி கைவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று கரச்சிப் பிரதேச சபை உயுப்பினர்கள் மீதும் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முடுக்கி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய முன்னைய செய்தி
வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபை தீர்மானம்
வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் நேற்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று சபை அமர்வுகள் ஆரம்பமானபோது , குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் சிறிரஞ்சன் முன்மொழிந்தார். “எமது விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வித்தாக வீழ்ந்தபோது அவர்களின் நினைவாகவும் வித்துடல்களை விதைக்கவும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை இறுதியுத்தத்தின் பின்னர் படையினர் அழித்து, அவற்றின் மேல் முகாம்களை அமைத்துள்ளனர். தற்போது எங்களுக்கென வடமாகாண அரசு அமைந்துள்ள நிலையில் எமது இளைஞர்களின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைக்கவேண்டும்” என்று தெரித்தார். இந்தப்பிரேரணைக்கு ஈ.பி.டி.பி உறுப்பினரான நகுலன் என்பவர் மட்டும் எதிர்ப்புத்தெரிவித்தார். ஆயினும் மற்றவர்கள் எல்லோரும் ஆதரிக்க தீர்மானம் பெரும்பான்மையோடு நிறைவேறியது.
















