பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் அஸ்கிவித் எனும் இளைஞர் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்த மிக இளமையான நபர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
24 வயதான ஜேம்ஸ் அஸ்கிவித், இலங்கை உட்பட 196 நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். இதற்காக அவர் 125,000 ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 2 கோடியே 61 இலட்சம் ரூபா) செலவிட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு அவர் இந்த பயணத்தை ஆரம்பித்தாராம். முதலில் நான் வியட்நாமுக்குச் சென்றேன். சுமார் 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்தேன். அமெரிக்கா கனடாவில் 5 மாதங்களைச் செலவிட்டேன். அலஸ்காஇ ஹவாய் உட்பட அமெரிக்காவின் 27 மாநிலங்களுக்கு நான் சென்றேன்’ என ஜேம்ஸ் அஸ்கிவித் கூறுகிறார்.
தற்போது வங்கியொன்றின் ஊழியராக பணியாற்றும் இவர் 16 வயதிலிருந்து பகுதிநேரத் தொழில் மூலம் சம்பாதித்து சேமித்த பணத்தை உலகை சுற்றிப்பார்ப்பதற்கான பயணத்துக்கு செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.
















