TNA நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றது – குமரன் பத்மநாதன்

kp9தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளா குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செயற்ட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை தூண்டும் வகையில் சில கடும்போக்குவாத சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும்போக்குவாதிகளும், புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு தடையான வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பி அதன் மூலம் இராணுவத்தை ஆத்திரமடைய சாவகச்தேசரி பிரதேச சபையி;ன் உறுப்பினர்கள் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் நபர்கள், யுத்தத்தின் பின்னர் பல்வேறு நெருக்குதல்கள் ஏற்படுவதாக போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் தமிழ் சிறுவர் சிறுமியர் பாதுகப்பாக இருக்கவில்லை என்பதனை மேற்குலக நாடுகள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply