பருத்திவீரன் விவகாரத்தில் சிவகுமார் குடும்பத்துடன் தீராப்பகையில் இருந்தார் இயக்குனர் அமீர்.
ஒரு இயக்குனர் நினைத்தால் யாரையும் கதாநாயகனாக்க முடியும் என்று சிவகுமார் குடும்பத்துக்கு காட்டுவதற்காக அமீர் எடுத்ததுதான் யோகி அவதாரம். இன்று யோகி போகியாகிவிட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டார்கள் அமீரும், சூர்யாவும். விடுவாரா அமீர்?
ரஜினிக்குப் பிறகு, தமிழக மக்கள் குடும்பத்தோடு பார்க்க விரும்புவது சூர்யாவின் படங்களைதான். அதனை அவர் கவனிக்கிறாரோ இல்லையோ, நான் கவனித்திருக்கிறேன்.
அவர் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிப்பதைவிட்டு குடும்பப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று அட்வைஸ் மழையாக பொழிந்தார்.
என்னை முதல்முறையாக ஒரு இயக்குனராக ஏற்றுக் கொண்டு மௌனம் பேசியதேயில் வாய்ப்பு தந்தவர் சூர்யாதான் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றது ஹைலைட்.
இந்த சந்திப்பு நடந்தது ஜன்னல் ஓரம் படத்தின் பாடல் காட்சி மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான்.
















