துப்பாக்கி குண்டுகளுடன் விமான நிலையத்திற்கு வந்த பெண் கைது

arrest5சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக யமுனா (49) என்ற பெண் இன்று காலை வந்தார்.

அவர் வைத்திருந்த கைப்பையை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்ததில் மாறுபட்ட சத்தம் எழுப்பியது. உடனடியாக அந்த பையில் என்ன இருக்கிறது என்று பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அதில் சிறியவகை துப்பாக்கிக்கான இரண்டு குண்டுகள் இருந்தன. இதையடுத்து அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். அவர் எதற்காக துப்பாக்கி குண்டுகளை எடுத்து சென்றார்.

தடை செய்யப்பட்ட பொருட்களை விமானத்தில் எடுத்து செல்வதாக இருந்தால் அதனை வெளிப்படையாக தெரிவித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் துப்பாக்கி குண்டுகளை எதற்காக கொண்டு வந்தார் என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Tags: , ,

Leave a Reply