சிரியாவில், தாயின் கருவில் இருக்கும் சிசுவை சுட்டுக்கொன்றால் சிகரெட்டுகள் வெல்லும் என கொடூர போட்டி நடைபெற்றதாக, இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர் டேவிட் நாட் என்பவர் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,
சிரியாவில் போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியாகின்றனர். நான் இதுவரை 20 ஆண்டுகள் போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளேன்.
ஆனால், இங்குதான் கர்ப்பிணி பெண்களை தாக்கி கொலை செய்வதை பார்க்கிறேன்.
மறைந்திருந்து தாக்கும் சிலர் அவர்களது பயிற்சிக்காக அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் சுடுகின்றனர். இதில் மிக கொடூரமாக இருந்தது என்னவென்றால் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசுவை சுட்டு கொல்பவர்களுக்கு சிகரெட்டுகள் வழங்கப்படும் போட்டியும் நடைபெறுகிறது.
ஒரு நாள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட இரண்டு நிறைமாத கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை துப்பாகியால் சுடப்பட்டு, அவர்களின் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தன.
இந்த கொடுமையை எவ்வாறு விவரிப்பது என்ற எனக்கு தெரியவில்லை. இது நரகத்தில் ஏற்படும் துயரத்தைவிடவும் கொடியது என்றார்
தற்போது லண்டன் திரும்பியிருக்கும் டேவிட், சிரியாவில் தேவையான மருத்துவ உதவிகள் மக்களை சென்றடைவதில்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
















