தலிபான்களை சமாதான வழியில் திருப்ப முயற்சித்த கிளின்டன்: அமெரிக்க தகவல் அம்பலம்

DD-SC-93-04622‘தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்காவை தாக்கப்போவதாக உளவுத்துறை கூறியுள்ளது. அவர்களை சமாதான வழியில் திருப்ப வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும் என்று 1998ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை கேட்டுக்கொண்டார்.

ஆனால், நவாசோ, ‘தலிபான் அமைப்பினர் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள். எதற்கும் பேசிப்பார்க்கிறேன்’ என்று நாசூக்காக கைவிரித்துள்ளார்.

பதினைந்து ஆண்டுக்கு பின் இந்த தொலைபேசி உரையாடல் இப்போது வெளிச்சத் துக்கு வந்துள்ளது. அமெரிக்காவை அதன் தூதரகங் களை தலிபான் தீவிரவாதிகள் தாக்க சதி திட்டங்களை தீட்டி உள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறையினருக்கு முதன் முதலில் 1998ல் தகவல் கிடைத்தது.

பல நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தாக்குவதுடன், அமெரிக்காவில் முக்கிய இடங்களை தகர்க்க சதி திட்டம் தீட்டியிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்தவுடன், வெள்ளை மாளிகையில் ஓவல் அரங்கில் உயர் அதிகாரிகளுடன் அப்போதைய ஜனாதிபதி கிளின்டன் பல முறை பேச்சு நடத்தினார்.

பின் பாகிஸ்தான் பிரதமராக அப்போது இருந்த நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் அழைத்தார். அவருடன் ஆறு நிமிடங்கள் பேசியுள்ளார்.

‘தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை சமாதான வழியில் திருப்ப முயற்சி செய்ய வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும். தனிப்பட்ட முறையில் இதை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கிளின்டன் கூறினார்.

அதற்கு பிடி கொடுக்காத நவாஸ் ஷெரீப், ‘தலிபான் தீவிரவாதிகள் மிகவும் கடுமையானவர்கள். அவர்களிடம் சமாதானம் பேச முடியாது. எதற்கும் எங்கள் பிரதிநிதிகளை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைவர்களிடம் பேச சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கிளின்டன், ‘உலக அமைதியை கெடுக்கும் வகையில் தலிபான் நடந்து கொள்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆனால், அவர்களை சமாதான வழியில் திருப்ப வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது.

அவர்கள் பிடிவாதமாக தாக்க முயற்சித்தால், அவர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று கண்டிப்புடன் கூறினார்.

இதற்கு நவாஸ் மவுனம் சாதித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை. இப்படி பேசியதை தாண்டி, அப்புறம் பாகிஸ்தான் பேசியதா தலிபான் பதில் என்ன என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

இந்த தொலைபேசி உரையாடல் குறித்த விவரம் வெள்ளை மாளிகை ஆவணங்களில் இருந்து இப்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், 2001 செப்டம்பர் 11ம் திகதி தலிபான் தீவிரவாதிகள், அமெரிக்காவில் நியூயார்க் இரட்டை கோபுரம், வாஷிங்டனில் பெண்டகன் உட்பட முக்கிய இடங்களை தகர்த்தது. நான்கு விமானங்களை மோத விட்டு நடத்திய பயங்கரத்தில் 3 ஆயிரம் பேர் இறந்தனர்.

15 ஆண்டுக்கு பின் மீண்டும் ஒபாமா கண்டிப்பாரா நவாஸ் கேட்பாரா?

பதினைந்து ஆண்டுக்கு பின், இப்போதும் தலிபான் அட்டகாசம் ஓயவில்லை. அமெரிக்காவுக்கு தொடர்ந்து குடைச்சல் தரும் நாச வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் ஆரம்பித்து பல நாடுகளில் தலிபான் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், தீவிரவாத மையமாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.

இதை நவாஸ் ரசிக்கவில்லை. ஆனால், ஒபாமா பதில் அளிக்கும் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் 23ம் திகதி வரும் போது கண்டிப்புடன் பேசுவதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில், 15 ஆண்டுக்கு பின் மீண்டும் வரும் 23ம் திகதி நவாசிடம் அதே போல தலிபான் விஷயத்தை கேட்கப்போகிறார் ஒபாமா. ஆனால், கிளின்டன் மாதிரி இணக்கமாக பேசாமல், கண்டிப்புடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply