வில்லியம் – கேட் தம்பதிகளின் 3 மாத குழந்தையின் உருவத்துடன் கனடாவில் முத்திரை

stamp-ukஇங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் குழந்தையின் உருவத்துடன் கூடிய முத்திரையை வெளியிட கனடா அரசு தீர்மானித்துள்ளது.

இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஜார்ஜ் என பெயரிடப்பட்டுள்ள 3 மாத குட்டி இளவரசர் இவர்.

இதனையடுத்து, அச்சிடப்பட்ட மிக குறைந்த அளவிலான இந்த தபால் முத்திரைகள் நாளை (22ம் திகதி) முதல் கனடாவில் உள்ள தபால் நிலையங்களில் கிடைக்கும் என அந்நாட்டின் தபால்துறை மந்திரி லிசா ரயிட் அறிவித்துள்ளார்.

இளவரசர் ஜார்ஜ் பிறந்த போது சிறப்பு நாணயங்களை கனடா அரசு வெளியிட்டதும், நியூசிலாந்து நாட்டில் ஏற்கனவே இளவரசர் ஜார்ஜின் உருவம் பொறித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: , , , , , ,

Leave a Reply