காதல் ஜோடி விஷ ஊசியேற்றி தற்கொலை

injectionகடற்படை வீரரும் அரச மருத்துவ தாதியுமான காதல் ஜோடி தமக்குத் தாமே ஊசி மூலம் விஷத்தை ஏற்றிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ரன்தெனிய வனப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

வெல்லவாயவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இருவரது சடலங்களையும் மீட்டுள்ளனர். அத்துடன் விஷ மருந்துக் குப்பிகள் ஊசிகள் மற்றும் கடமை அடையாள அட்டைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணம் முடித்துள்ளவர்களென்றும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரில் ஆண் கடற்படை வீரராகவும் பெண் அரச மருத்துவமனையொன்றில் தாதியாகவும் இருந்துள்ளனர். இவ்விருவரும் நீண்ட காலமாக காதல் ஜோடிகளாக இருந்து வந்துள்ளனர். இவ்விருவரும் தற்கொலை செய்யும் முன்பு காதலி தன் கணவனுக்கும் காதலன் தனது சட்டப்பூர்வ மனைவிக்கும் கடிதங்களை எழுதி அனுப்பிய பிறகே விஷ ஊசியை ஏற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ்விருவரின் தற்கொலைக்கான காரணம் மர்மமாக இருந்து வருவதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் ஜோடிகளினால் அனுப்பப்பட்ட கடிதங்கள் கிடைக்கப் பெற்றவர்களும் கடிதங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply