கெசினோவை எதிர்க்கும் பா.உறுப்பினர்கள் பின் வெள்ளை வேன் செல்லக்கூடும் – ஐதேக

josef-micபாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள கெசினோ சட்டமூலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பமின்றி கை உயர்த்துவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அவ்வாறு ஆதரவு அளிக்காவிட்டால் அவர்கள் பின்னால் வெள்ளை வேன் செல்லக்கூடும் என கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

´நாட்டின் பெறுமதிவாய்ந்த வளமான தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. அவற்றை கட்டியெழுப்ப அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் வெள்ளைக்காரர்களுக்கு சூது விளையாட வரி நிவாரணம் வழங்கி கெசினோவை பரப்பி விபச்சாரத்தை சட்ட ரீதியாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

கெசினோ சட்டமூலத்தை எதிர்க்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

பகிரங்கமாக விபச்சாரிகளை அழைத்துவந்து இலங்கையின் கலாசாரத்தை அழைக்க முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பூரண எதிர்ப்பை வெளியிடுகிறது.

´புது சரணாய்´ என்று முன்னால் எழுதப்பட்ட லொறியின் உள்ளே இனி விபச்சாரிகள், கெசினோ இருக்கும். இது குறித்து சாரதியிடம் கேட்டால் அவர் தெரியாமல் தவிப்பார்.

எத்தனோல், ஹெரோயின் அதிகளவு கொண்டுவந்த நபர்கள் குறித்து இதுவரை விசாரணை இல்லை. அவை அனைத்தும் “கேபியின் பணம் மற்றும் கப்பல் போன்று இருப்பது மட்டுமே” இருக்கும் இடமே தெரியாது.

அன்று தர்ம பதம் கூறிய நாட்டில் இன்று அரசாங்கத்தின் பதம் மதுபோதை, கெசினோ, விபச்சாரம் என ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply