ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஜய்

shreya-ghoshal-singerஜில்லா படத்திற்காக ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார் விஜய்.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

துப்பாக்கிக்காக ‘கூகுள் கூகுள்’, தலைவாவுக்காக ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடல்களை பாடி அசத்திய விஜய் அடுத்து ஜில்லாவுக்காகவும் ஒரு பாடலை, ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்தப் பாடலை கவியரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.

டி.இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அறிமுக இயக்குனர் நேசன் இயக்கி வரும் இந்தப் படம் வருகிற பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்கவுள்ளது.

Tags: , , ,

Leave a Reply