ஹன்சிகாவை மறுத்து லட்சுமி மேனனுக்கு பிடிவாதம் பிடிக்கும் விஷால்

hansikaகும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஷால் நடிப்பில் ‘பாண்டிய நாடு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதுதவிர, ‘மஞ்சப்பை’, ‘சிப்பாய்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

விஷாலுடன் இவர் நடித்த ‘பாண்டிய நாடு’ படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு விஷால் நடிக்கும் புதிய படத்திலும் லட்சுமி மேனனே நடிக்கவிருக்கிறாராம்.

விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களை எடுத்த திரு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தையும் விஷாலே தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஹன்சிகாவைத்தான் ஒப்பந்தம் செய்ய முடிவெத்திருந்தார்கள். ஆனால், ‘பாண்டிய நாடு’ படத்தில் லட்சுமி மேனனின் நடிப்பை பார்த்து வியந்து போன விஷால், தன்னுடைய அடுத்த படத்திலும் லட்சுமி மேனன்தான் நடிக்கவேண்டும் என்று விடாபிடியாக இருந்தாராம்.

இதையடுத்தே இப்படத்தில் லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply