ரோபோ­வாக மாற்­றப்­பட்ட கார்

robo-carபிரிட்­டனைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் பழைய கார் ஒன்றை ஹொலிவூட் பாணியில் பாரிய ரோபோ­வாக மாற்­றி­மைத்­துள்ளார்.

ஹெட்டெய்ன் பட்டேல் எனும் கலை­ஞரே காரை ரோபோ­வாக மாற்­றி­யுள்ளார். இவர் பிரிட்­டனில் குடி­யே­றிய இந்­திய தம்­ப­தியின் மக­னாவார்.

போர்ட் பீஸ்டா ரக காரொன்றே இவ்­வாறு ரோபோ­வாக மாற்­றப்­பட்­டுள்­ளது. இதற்­காக மூன்று மாத காலத்தை செல­விட்­டுள்ளார் ஹெய்டன் பட்டேல்.

இவரின் தந்தை, வாக­னங்­களை பிரேத வாக­னங்­க­ளாக மாற்­று­வதை தொழி­லாக கொண்­டுள்ளார். பட்­டேலின் சகோ­தரர் ஒரு பொறி­யி­ய­லாளர். இவ்­வி­ரு­வரும் பட்­டேலின் இந்த முயற்­சிக்கு உத­வி­னார்கள் என பட்டேல் தெரி­வித்­துள்ளார்.

17 வயதில் தான் முதன்­மு­த­லாக செலுத்­திய கார் இது­வென்­பதால் இக்­காரை பயன்­ப­டுத்தி சிற்­ப­மொன்றை நிர்­மா­ணிக்க வேண்டும் என தான் விரும்­பி­ய­தாக பட்டேல் கூறு­கிறார்.

தான் உரு­வாக்­கிய ரோபோ சிற்­ப­மா­னது இந்­தி­யா­வி­லுள்ள உழைக்கும் வர்க்க மக்­க­ளுக்கும் பிரிட்­ட­னி­லுள்ள தனது குடும்­பத்­துக்­கு­மான பிணைப்பை சித்­த­ரிப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

Tags: ,

Leave a Reply