நேதாஜி சுபாஷ் சந்திரேபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை எங்களிடம் தர வேண்டும் என அவரது உறவினர்கள் மம்தா பானர்ஜியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேதாஜியின் உறவினர்கள் மேற்கு வங்க அரசிற்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், சுபாஷ் சந்திரேபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை வெளியிடவேண்டுமென்றும், இந்த ஆவணங்களில் இருக்கும் தகவலின் உதவியுடன் சந்திரேபோஸின் வரலாறு குறித்த பல தகவல்கள் தெரியவருமென தெரிவித்துள்ளனர்.
சுதந்தர போராட்ட வீரர் நேதாஜி, தற்போதைய மேற்கு வங்கம் மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் மற்றும் பிற தகவல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடும்படி அவரது உறவினர்கள் மம்தா பானர்ஜியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்
கொல்கத்தாவில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தியாகிகள் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
நேதாஜியின் பேரனான சந்திரகுமார் போஸ், விழாவில் கலந்துகொண்டபின் பேசியப்போது, சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய கோப்புகளை மேற்கு வங்காள அரசிடம் உள்ளது. அவை நமக்கு கிடைத்தால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்களை அறிய முடியும்.
ஆனால், இதுதொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நாங்கள் பலமுறை கடிதங்கள் எழுதி விட்டோம்.ஒரு கடிதத்திற்கு கூட அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
மாநில அரசும், மத்திய அரசும் நேதாஜி தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிடவேண்டும் என்றார்.
















