அஜித் படத்துடன் மோத விரும்பாமல் தான் ஹீரோயினாக நடித்த பட ரிலீசை தள்ளி வைத்தார் நயன்தாரா.
இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. படத்தில் கர்ப்பிணியான இவர், காணாமல் போன தனது கணவரை தேடும் கதாபாத்திரம் ஏற்றார். இப்படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
நயன்தாரா கர்ப்பிணி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கடந்த தசரா விழாவின்போது ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் அது கைகூடி வரவில்லை.
இதையடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய எண்ணினர். அதற்கு நயன்தாரா ஒப்புதல் தரவில்லை. அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார்.
இப்படம் தீபாவளியையொட்டி வரும் 31ம் திகதி ரிலீஸ் ஆகிறது. அந்த சமயத்தில் அனாமிகா ரிலீஸ் ஆவதை நயன்தாரா விரும்பவில்லையாம்.
இது பற்றி இயக்குனர், தயாரிப்பாளரிடம் பேசினார். இதையடுத்து பட ரிலீஸ் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
















