41 மெகாபிக்சல் நோக்கியா லூமியா 1020 மொபைல்…

nokia-lumia-1020நோக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான லூமியா 1020 என்ற 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது .

இந்த நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது அதன் கேமரா தான் .

இந்த கேமரா தரம் , டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறன் உள்ளது. இதை பற்றி பார்ப்பதற்க்கு முன் இந்க போனின் மற்ற சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.5 இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்,
வின்டோஸ் 8 ஓஎஸ்,
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்,
41 மெகாபிக்சல் கேமரா,
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
2ஜிபி ராம்(RAM),
32ஜிபி மெமரி,
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்,
3ஜி,4ஜி wi-fi,
158 கிராம்,
10.4mm,
2000mAh பேட்டரி,

டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிற்க்கு படங்களை தெளிவாக பிடிக்கிறது,

01. நோக்கியா லூமியா 1020வில் மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக அமைவது அதன் 41 மெகாபிக்சல் கேமரா தான். இதில் உள்ள ஜூம் டெக்னாலஜி நம்மை வியக்க வைக்கிறது.
02. லூமியா 1020 வில் ஒரு கிளிக் செய்தால் இரண்டு போட்டோக்கள் எடுக்கும். ஒரு போட்டோ 41 மெகாபிக்சல் ஹை ரெசலூஸனில் எடுக்கப்படும் மற்றொன்று 5 மெகாபிக்சல் படமாக எடுக்கப்படும்.

03. லூமியா 1020 – ல் இமேஜ் ஸ்டெப்லைசேஷன் எனும் புதிய டெக்னாலஜி உள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

04. நோக்கியா லூமியா 1020, ரெவலூஸ்னரி சாப்ட்வேரை போன்ற கேமரா டெக்னாலஜியை கொண்டுள்ளது.

05. நோக்கியா லூமியா 1020 1/16,000 ஷாட் ஷட்டர் ஸ்பீடு திறன் கொண்டுள்ளது.

06. நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.

07. இதில் எல்ஈடி பிளாஷ் மற்றும் ஜெனான் பிளாஷ் உள்ளது. வீடியோ எடுப்பதற்க்கு எல்ஈடி பிளாஷும் போட்டோ எடுப்பதற்க்கு ஜெனான் பிளாஷும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

08.நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.

Tags: , ,

Leave a Reply