நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நேரடி ஒளிபரப்பு

live-lkஇலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கோட்டையில் உள்ள மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள பாரிய தொலைக்காட்சி திரையில் நாடாளுமன்ற விவாதங்கள் இன்று முதல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இன்று மாலை 4. மணி முதல் நாடாளுமன்ற மைதானத்தில் விவாதங்களை மக்கள் நேரடியாக பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் கட்டமாக நாடாளுமன்ற விவாதங்களை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் சமால் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளதுடன் பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்கு கட்சிகள் கொள்கை அடிப்படையில் இணக்கம் வெளியிட்டிருந்தன.

பொருளாதார பிரச்சினை மற்றும் தெளிவான கொள்கைகள் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை கால தாமதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply