பொதுநலவாய மாநாட்டில் மலேசிய பிரதமர் கலந்து கொள்வது உறுதி

najipஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் மலேசியா பங்கேற்கும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா சார்பில் மாநாட்டில் பிரதமர் நஜிப் டன் ரசாக் கலந்து கொள்வார் என மலேசிய வெளிவிவகார செயலக தென்னாசிய பிரிவு உதவி செயலாளர் மசிதா அஹமட் தெரிவித்துள்ளார்.

23 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நவம்பர் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் மீறல் நிலையை கருத்திற் கொண்டு மலேசியா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பல அமைப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் புரியப்பட்டுள்ளதால் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும்படி மலேசிய பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மாநாட்டை புறக்கணிக்காது அதில் கலந்து கொள்ள மலேசிய பிரதமர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply