மும்பை மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரிட்டன் பெண்ணை மானபங்கம் செய்த நபர் பொலிசாரால் கைது செய்யப்படார்.
பிரிட்டனை சேர்ந்த 27 வயது இளம்பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் மும்பையில் தங்கியுள்ளார். பாலிவுட் திரைப்படங்களில் இடம் பெறும் நடனக் காட்சிகளில் நடிக்கும் இவர், தன் நண்பர்கள் இருவருடன் லோகன்ட்வாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றார்.
ஷாப்பிங்கை முடித்து, வீடு திரும்புவதற்காக ஆட்டோவில் ஏற முயன்றபோது அங்கு வந்த மர்ம நபர் அந்த பெண்ணின் உடலை தொட்டு மானபங்கம் செய்தார்.
அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மற்றும் அவரது நண்பர்கள், கூச்சலிட்டனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் மர்ம நபரை விரட்டி பிடித்தார்.
பின் மர்ம நபர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மானபங்கம் செய்த நபர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
















