இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ இராச்சியம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளில் மத்திய அரசாங்கம் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
பதில் பிரதம நீதியரசர் அகர்வால் மற்றும் நீதவான் எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்தனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சிடமும் இலங்கை அமர்வுகளில் பங்கேற்க வேண்டாம் என கோரி மனுவொன்று தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நாளைய தினம் நடத்தப்பட உள்ளது.
















