இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சீனாவுக்கு 3 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு இன்று பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் லீ கெகியாங் உடன் இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது.
நேற்று சீனா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பேசிய பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இந்திய-சீன எல்லையில் பதட்டம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















