இலங்கை மனித உரிமை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் ; ஆன் சான் சூகி, கமரூனிடம் கோரிக்கை

Daw-Aung-San-Suu-Kyiஇலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆன் சான் சூகி பிரித்தானிய பிரதமர் கமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் லண்டனில் கமரூனைச் சந்தித்த போது ஆன் சான் சூகி இதனைத் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் பங்கேற்கும் போது மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுமனே இலங்கை அரசாங்கத்தை மட்டும் சந்திக்காது அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டியது அவசியம் என்றார். இதேவேளை ஆன் சான் சூகியின் கருத்து மிகவும் சரியானது என பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார். அமர்வுகளை புறக்கணிக்குமாறு தொழிற்கட்சி விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என தெரிவித்துள்ள கமரூன் யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமர்வுகளிற்கு செல்லாது கேள்வி எழுப்பவோ குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவோ முடியாது ஆனால் தொழிற்கட்சியின் பகிஷ்கரிப்பு உத்தி பொருத்தமானதாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply