கொள்ளுபிட்டி – டின்ஸ்டன் பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (23) மாலை இந்த நிலையத்தை சுற்றிவளைத்தனர்.
இதன்போது குறித்த நிலையத்தில் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 7 பெண்களும் நிலையத்தின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் பத்தரமுல்ல, கொட்டுகொட, ஹட்டன், மதவாச்சி, காலி, மீகொட, நாராஹென்பிட்ட, ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த 29 தொடக்கம் 54 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















