கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

mord-nachimarயாழ்.நாச்சிமார் கோயிலடியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலைக்கு நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது

“உன்னைப்படைத்த பெண்ணைச் சிதைக்காதே”, “எமது வாழ்க்கையை அழிக்காதே” எனும் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டமானது ஏ 9 வீதியில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பெண்கள் அமைப்புக்கள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன் மற்றும் எம்.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கத்தோலிக்க மதகுருமார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply