பொதுநலவாய மாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வடக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் கமரூன் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பார் என உறுதியளித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் டேவிட் கமரூன் இதன்போது வட மாகாணத்திற்கு விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் யுத்த வலயத்தை நேரில் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மிறல்களில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கமரூன் கலந்து கொள்ள கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்காக இந்த பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரின் எதிர்க் கட்சித் தலைவி ஆன் சாங் சூகியை சந்தித்து பேசும் போதே டேவிட் கமரூன் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















