வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர் இருபத்தைந்தாம் திகதி, வடக்கின் முதலாவது மாகாண சபையின் முதலாவது (கன்னி) அமர்வு நடைபெறுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர் இருபத்தைந்தாம் திகதி, வடக்கின் முதலாவது மாகாண சபையின் முதலாவது (கன்னி) அமர்வு நடைபெறுகிறது.
அந்த அமர்வுக்கு முன்னதாக, சபைக்கு முன்னோட்டமாக, அரசாங்கத்தின் தரப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முக்கிய தகவல் ஒன்றைக் கொழும்பில் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.வடக்கில் சட்டம் ஒழுங்கை முதலமைச்சரே நிலைநாட்ட வேண்டும். அதற்கான முழுப்பொறுப்பும் முதலமைச்சருக்கே உண்டு
விழிப்புக் குழுக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, பொலிஸாருக்கு உதவுவதன் மூலம், வடக்கில் இடம்பெறும் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களைத்தடுக்க இயலும் தற்போது தமக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முதலமைச்சர் மக்களுக்குச் சேவை ஆற்ற வேண்டும்என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புத்திமதி நல்கி உள்ளார்.
வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைக்கும் கூட்டமைப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தக்க வாறு பயன்படுத்தித் தமது மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் வீண் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
பாதுகாப்புச் செயலாளர் உதிர்த்த மேற்சொன்ன கருத்துக் கள், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியன. அவற்றுள், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு எவரும் கோர முடியாது என்றும் அவர் அரசின் உள்ளார்ந்த நோக் கத்தை வெளிப்படுத்தி உள்ளமை, கூர்ந்து கவனத்தில் கொள் ளப்பட வேண்டிய ஒன்றாகும். வடமாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் என்பதால், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்கினார்கள் என்று கொள்ள முடியாது, கருதக்கூடாது
வடக்கில் இராணுவத்தினர் நிலை கொண்டிருக்க வேண் டும் என்பதே எண்பது சதவீதமான மக்களின் கருத்தாக உள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (U.N.H.C.R) மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் இணைப்பு அலுவலகம் (O.C.H.A) ஆகியவற்றின் அறிக்கைகள் அதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன
அதாவது, வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மக்கள் கூறவில்லை என்று பாதுகாப்புச் செயலர் தெரிவித்திருக்கிறார்.
வடக்கு மக்களின் நிலைப்பாடு மேற்கண்டவாறு உள்ள தாக அவர் தெரிவித்துள்ள போதிலும், வடக்கு மாகாண சபை யின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்னர் தெரிவித்த கீழ்க் கண்ட கருத்துக்கள் கவனத் தில் கொள்ளப்பட வேண்டியனவாகும்:
• மக்கள் வழங்கும் ஆணையைக் கொண்டு, இராணு வத்தை வடக்கில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவோம். அதற்கான பலம் மக்களிடமே உள்ளது.
• தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு (கட்சிக்குக்) அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்திருப்பது சுயாட்சிக்கான வாக்குகளாக அமைந்திருக்கின்றன.
• அதேவேளையில் வட பகுதியில் இருந்து இராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
இத்தகைய ஒரு நிலையில் இராணுவத்தை அகற்றுமாறு மக்கள் வாக்காளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கமாட் டார்கள் என்று கொள்வதற்கில்லையே…!
வடக்கு மக்களின் மனநிலையை முதலமைச்சர் வெளிப் படுத்தி உள்ள நிலையில், வடக்கில் இராணுவத்தின் பிரசன் னத்தை குறிப்பிடத்தக்க வீதத்தில் குறைப்பதற்கு அரசு மனங் கொள்வது வரவேற்கத்தக்க செயற்பாடாக அமையும்.
அதனை அனைத்துலக நாடுகளும் வரவேற்கும். வடக்கு தெற்கு மக்களிடையே நல்லிணக்கம் உண்டாகவும், நாடு வளர்ச்சி கண்டு முன்னேறவும் வழி கிடைக்கும். நல்லவை செய்யின் நல்லனவே விளையும்.
















