கொலம்பியாவில் தன்னுடைய 12 மகள்களின் கன்னித்தன்மையை விற்ற தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலம்பியாவை சேர்ந்த 45 வயது பெண் மொரேனோ. இவருக்கு 14 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 12 பேரை இவர் விபச்சாரத்திற்கு வற்புறுத்தி அனுப்பியதாக மொரேனோ மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் மொரேனோ தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, அவர் தன்னுடைய மகள்களுக்கு 12 வயது முடிந்தவுடன் அவர்கள் கன்னித்தன்மையுடன் இருக்கும் போதே விபச்சாரத்திற்காக விற்று விட்டதாக தெரியவந்தது.
இவ்வாறு தன்னுடைய 12 மகள்களையும் விற்ற மொரேனோவின் 11 மற்றும் 9 வயது மகள்கள் இருவரும் பொலிஸாரின் கண்காணிப்பில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
மொரேனோ மீது, விபச்சாரத்தால் 14 வயதில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த அவரது மகள்களில் ஒருவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















