பொதுநலவாயத்தை கனடா புறக்கணிக்க புலிகளே காரணம்; என்கிறது இலங்கை

srilanka-logoவடக்கு மாகாணசபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனடா கலந்து கொள்ளப் போவதில்லை என கனேடியப்பிரதமர் நேரடியாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் இது அவருடைய தன்னிச்சையான முடிவல்ல. இது புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினாலேயே மேற்கொள்ளப்பட்ட ஒன்று.

எனினும் அவருடைய அறிவிப்பினை கனேடியப் பிரஜைகள் விரும்பவில்லை. அதற்கமைய கனேடிய பிரதமரின் பகிரங்க புறக்கணிப்புக்கு ஏற்கனவே கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் கனேடிய பிரதமர் இந்த முடிவை எடுக்கும் முன்னர் தமது நாட்டினதும் பிராந்தியத்தினதும் நலன்களை கருத்திற்கொண்டிருக்க வேண்டும். அதனையும் அவர் தவறவிட்டுள்ளார். மேலும் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களுடைய நாடுகளையே பாதிக்கும்.

இதேவேளை புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையானது மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply