இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சல்மான் குர்ஷித் இதனை தெரிவித்துள்ளார்.
மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று என்று தெரிவித்துள்ள குர்ஷித், மாநாட்டில் கலந்து கொள்ளாமல் போனால் தமிழக மீனவர் பிரச்னையை எப்படி எழுப்புவது என்றும் வினவியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பெயரளவில் கூட பங்கேற்க கூடாது என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில் குர்ஷித்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
















