தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று அமெரிக்கா பயணம்

tnalogo2தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று (28) அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவருமே இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

நான்கு நாட்கள் விஜயமா இருவரும் இன்று இரவு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அமெரிக்க தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக தாம் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விஜயத்தின்போது அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply