பொதுநலவாய மாநாட்டை முற்றாகப் புறக்கணியுங்கள்; இந்திய மத்திய அரசிடம் டி.ராஜா கோரிக்கை

D-Rajaதமிழர்களின் உணர்வுகளை மதித்து பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியத் தரப்பில் இருந்து எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது,

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக சட்ட சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அது அனைத்துத் தமிழர்க ளின் உணர்வைப் பிரதிபலிக்கும் தீர்மானமாகும். தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்திய அரசு சார்பாகப் பிரதமரோ அல்லது வேறு யாராவதோ இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது. இது குறித்து தனது நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply