தொலைபேசி ஒட்டுக் கேட்டல் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிற்கு தெரியாது என அந்நாட்டு புலனாய்வுப் பிரவினர் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மார்கலின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டமை குறித்து ஒபாமாவிடம் அறிவிக்கப்படவில்லை என தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் ஜெனரல் கீத் அலக்சான்டர் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் மார்கலின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாரியளவில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது,
மார்கலின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டமை தொடர்பில் 2010ம் ஆண்டு ஜனாதிபதி ஒபாமாவிற்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடருமாறு ஒபாமா கூறியதாகவும் ஜெர்மனிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், இதனை அமெரிக்க புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி மறுத்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் குறித்து ஒபாமாவிடம் பேசவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















