நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மூலம், நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இன்று காலை 7.00 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தப் பாதையால் 11,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
25.8 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த அதிவேகப் பாதை சீன அரசின் அனுசரணையோடு அமைக்கப்பட்டுள்ளது.
















