பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் இலங்கை விஜயத்தின்போது புதிய பல்கலைக்கழகம் ஒன்று திறக்கப்படும் என வெளியான செய்தியை பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர் பிரித்தானியாவின் லேன்கஷயர் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை இலங்கையில் திறந்து வைப்பார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் சார்ள்ஸின் நிகழ்ச்சி நிரலின்படி அவ்வாறானதொரு நிகழ்வு தொடர்பாக குறிப்பிடப்படவில்லை என பிரித்தானிய தூதரகம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















