வென்னப்புவ – பொரலஸ்ஸ பகுதியில் சேவல் சண்டை நடத்தும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் வென்னப்புவ பொலிஸாரால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் தப்பியோடியதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் விட்டுச் சென்ற 25 மோட்டார் சைக்கிள்கள், 6 முச்சக்கர வண்டிகள், வேன், லொரி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
















