கிறிஸ்தவ மக்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் டிவிட்டர் சமூக வலைத்தளம் மூலம் ஒரு கோடி ஆதரவாளர்களை பெற்று உள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும், “நியூயார்க் டைம்ஸ்´ பத்திரிகை, “டிவிட்டர்´ இணையதளத்தில், மிக அதிக ஆதரவாளர்களை கொண்டுள்ள பிரபலங்கள் குறித்து, ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், பிரபல பாப் பாடகர்கள், ஜஸ்டின் பீவர், கேத்தி பெரி மற்றும் லேடி காகா ஆகியோர், 4 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு அடுத்த இடத்தில், போப் பிரான்சிஸ் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
வாடிகனில் உள்ள, போப் பிரான்சிஸ்சுக்கு டிவிட்டர் இணையதளத்தில் லத்தீன், போலிஷ், அரபிக் மற்றும் பல மொழிகளில் ஒன்பது கணக்குகள் உள்ளன.
அனைத்து கணக்குகளிலும் சேர்த்து, ஒரு கோடிக்கும் அதிகமானோர் அவரை பின்பற்றுவது தெரிய வந்துள்ளது.
இத்தகவல் குறித்து, போப் பிரான்சிஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
















