பொது நல­வாய மாநாட்­டினை ஆத­ரிக்கப் போவ­தில்லை; விஜித ஹேரத்

vijithaபொது நல­வாய அரச தலைவர் உச்சி மாநாட்­டினை ஆத­ரிக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அர்த்­த­மில்­லாத அர­சாங்க செயற்­பா­டு­களில் ஒன்­றா­கவே இந்த உச்சி மாநாடும் அமைந்­துள்­ளது என்று மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி) தெரி­வித்­துள்­ளது.

பொது நல­வாய உச்சி மாநாடு தொடர்பில் இனிமேல் எவ்­விதக் கருத்­துக்­க­ளையும் தெரி­விக்கப் போவ­தில்லை எனவும் அக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் தெரி­விக்­கையில்,

பொது நல­வாய அரச தலை­வர்கள் உச்சி மாநாட்டில் பிரித்­தா­னிய இள­வ­ரசர் கலந்து கொள்­வ­தாக தக­வல்கள் தெரி­ய­வந்­துள்­ளன. எனவே இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில் எமது விரோ­தத்­தினை வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை என்ற முடி­வி­லேயே எமது கட்சி உள்­ளது. அதேபோல் இம் மாநாட்­டினை ஆத­ரிக்கும் எண்­ணமும் எமக்­கில்லை.

இம் மாநாட்டு காலப் பகு­தி­களில் எதிர்க்­கட்­சிகள் தமது எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொள்ளப் போவ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் நாம் எந்தக் கட்­சி­க­ளோடும் இணைந்து எமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தப் போவ­தில்லை. நாம் தனி­யான கொள்­கை­யி­லேயே எமது செயற்­பா­டுகள் அனைத்­தையும் செய்து வரு­கின்றோம். இவ் விட­யத்­திலும் நாம் தனித்தே செயற்­ப­டுவோம்.

அர­சாங்கம் செய்யும் அர்த்­த­மில்­லாத வேலைத்­திட்­டங்­களில் ஒன்­றா­கவே இல ங்­கையில் நடத்­தப்­படும் இப் பொது நல­வாய உச்சி மாநாடும் அமைந்­துள்­ளது. எனவே, இது தொடர்பில் கவ­னிக்க வேண்­டி­ய­தொரு அவ­சியம் இல்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி தெரி­விக்­கையில்,

நாட்டின் பொரு­ளா­தார மற்றும் வாழ்­வா­தார சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்ற நிலையில் அர­சாங்கம் கோடிக் கணக்கில் பணத்தை செல­வ­ழித்து மாநாடு நடத்­து­கின்­றது.

தொடர் விலை­யேற்­றங்­களை செய்யும் அர­சாங்கம் இம் மாநாட்டின் பின்னர் மேலும் இரு மடங்கு விலை உயர்­வினை மேற்­கொள்ளப் போகின்­றது. மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­களை கண்டு கொள்­ளாது. மக்­க­ளுக்­கான நிவா­ர­ணங்­களை வழங்­காத அர­சாங்கம் தமது கௌர­வத்­திற்­கா­கவே இவ் உச்சி மாநாட்­டினை நடத்த முயற்­சித்து வரு­கின்­றது.

நாம் எம்­போ­தும் அர­சாங்­கத்தின் மோச­மான செயற்­பா­டு­களை எதிர்க்­கின்றோம். பொது நல­வாய மாநாடு தொடர்பில் முன்னதாகவே எமது எதிர்ப்பினை தெரிவித்துவிட்டோம்.

எனவே, இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துக்களை தெரிவிப்பதில் அர்த்த மில்லை. அரசாங்கம் எப்போதும் நன் மை களைச் செய்யப் போவதில்லை என வும் அவர் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply