விளக்க மறியலில் இருந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின் விடுதலை

courtஹெரோயின் கடத்தி விற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டு 13 வருடங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்தது.

ரவிச்சந்திரன் அல்லது ரவி எனப்படும் இவர் 7.2 கிராம் ஹெரோயின் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 1999 இல் தொட்டலங்கவில் வைத்து போதைப் பொருள் தடுப்பு இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர், கடந்த 13 வருடகாலமாக விளக்க மறியலில் இருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணை நடந்தது.

பொலிஸாரின் சாட்சியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக சந்தேகநபரின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டியதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க சந்தேகநபரை விடுலை செய்தார்.

Tags: ,

Leave a Reply