வடக்கு முதலமைச்சர் இனக் குரோதத்தை தூண்டுகின்றார்!

wimal-weerawansa‘விக்னேஸ்வரனின் கொள்கைகளை சிங்கள அரசியல்வாதிகளும் பின்பற்றினால், தெற்கில் தமிழ் மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்படும்’ விமல் வீரவன்ச எச்சரிக்கை

வடக்கு முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இனக் குரோதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளவத்தையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் கொள்கைகளை சிங்கள அரசியல்வாதிகளும் பின்பற்றினால், தெற்கில் தமி;ழ் மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்ற முடியாது என்பதன் மூலம், தமிழ் மக்கள் வடக்கை மட்டுமா கோருகின்றனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கிற்கு வெளியே தமிழர்கள் வாழ்வதற்கு உரிமை கிடையாதா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் கொழும்பில் கல்வி கற்று கொழும்பில் வாழ்ந்தவர் எனவும், கொழும்பில் நடைபெறும் கொக்டேயில் மதுபான விருந்துபசாரங்களில் பங்குபற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply