பெரம்பலூர் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் தலைவர்களோ, பிரதிநிதிகளோ பங்கேற்க கூடாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதே நேரத்தில் அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது.
இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
இந்தியா சார்பில் யாரேனும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் அது காங்கிரஸ் அரசுக்கு வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழக அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றார்.
















