தம்புள்ளை காளி கோயில் இடித்தழிப்பு

dambullah-templeதம்புள்ளையில்அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் டொக்டர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் கடந்த 32 ஆண்டுகளாக காணப்பட்ட இந்து ஆலயமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் அழிக்கப்படமாட்டாது என பலர் வாக்குறுதி அளித்த போதிலும், இறுதியில் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் இரவு இந்த ஆலயம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

கோயிலை அழிக்க வேண்டாம் என தாமும், பாராளுன்ற உறுப்பினர் யோகராஜனும் ஜனாதிபதியிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

கோயில் தாக்கி அழிக்ப்பட்டமை குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் முறைப்பாடு செய்ய உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இராணுவத்தினர் பௌத்த பிக்குகளுடன் சென்று கோயிலை அழித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply