இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பொதுநலவாய மாநாட்டின் முதல் நாள் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக புதுடில்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செய்தியால் பிறக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
















